×

தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடை உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கலெக்டர் தகவல்
மதுரை, செப். 3: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் தெரிவித்ததாவது: 2022ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு உரிமம் கோருபவர்கள் இணைய வழியில் விண்ணப்பம் செய்து தற்காலிக உரிமம் பெற்று கொள்ளலாம். இதற்கான வழிமுறைகள் அரசால் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி மதுரை மாவட்டத்தில் எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பிப்பவர்கள், வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008ன் கீழ் உரிய நடைமுறைகளை நடைமுறைகளை பின்பற்றி விண்ணப்பித்திட வேண்டும், வரும் செப்.30ம் தேதிக்குள் இணைய வழியாக இ-சேவை மையம் மூலமாக குறிப்பிட்ட ஆவணங்களுடன் மனு செய்து கொள்ள வேண்டும். இதன்படி கடை வரைபடம் 6 நகல்கள், கிரைய ஆவணங்கள் அசல் மற்றும் 5 நகல்கள், உரிமக்கட்டணம் ரூ.500 அரசு கணக்கில் செலுத்தியதற்கான ரசீது (அசல்), முகவரிக்கான சான்றாக ஆதார், பான், குடும்ப, ஸ்மார்ட் கார்டு ஏதாவது மற்றும் உள்ளாட்சி ரசீது, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றை இணைத்து அனுப்பி வேண்டும். செப்.30ம் தேதிக்கு பின்பு சமர்ப்பிக்கப்படும் இணைய வழி விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்

Tags : Diwali ,
× RELATED தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில்...